மணமகள் சஹானா, மணமகன் ரகீப்.
இவர்தம் திருமணத்துக்கு நான் எழுதிய பாடல். இதில் வரும் மற்ற பெயர்கள், பெற்றோர் மற்றும் உறவினர்கள்.
இருமணம் கூடும் திருநாளில் இரு இதயங்கள் மகிழ்கிறது
எங்க சஹானாவும் ரகீபும் சேரும் நாளில் காதல் தெரிகிறது.
இருமணம் கூடும் திருநாளில் இரு இதயங்கள் மகிழ்கிறது
எங்க சஹானாவும் ரகீபும் சேரும் நாளில் காதல் தெரிகிறது.
பேபிமா மனமும் வாழ்த்துக்கள் தூவி, ஆசிகள் தருகின்றார்
அன்பு அபுதாஹிர் ஹாஜி வானில் இருந்தே பூமழை பொழிகின்றார்.
பேபிமா மனமும் வாழ்த்துக்கள் தூவி, ஆசிகள் தருகின்றார்
அன்பு அபுதாஹிர் ஹாஜி வானில் இருந்தே பூமழை பொழிகின்றார்.
சாஹீ தாவும் அன்சாரீயும் ஆஸ்மியும் போற்றுகின்றார்
வாழ்க வாழ்க இனிதாய் வாழ்க என்றவர் வாழ்த்துகின்றார்.
இருமணம் கூடும் திருநாளில் இரு இதயங்கள் மகிழ்கிறது
எங்க சஹானாவும் ரகீபும் சேரும் நாளில் காதல் தெரிகிறது.
அமிதலி ராஹினா உசைனலி பாத்திமா வாழ்த்திடவே வருக
அன்பு ஜாஹிதா ஹாஜி தாஜ்மைதீனும் போற்றிடவே வருக.
அமிதலி ராஹினா உசைனலி பாத்திமா வாழ்த்திடவே வருக
அன்பு ஜாஹிதா ஹாஜி தாஜ்மைதீனும் போற்றிடவே வருக.
அன்புடன் தஹ்சின் பண்புடன் ரிஃபத்தும் இன்புறவே வருக
வாழும் நாளில் வளங்கள் பெற்று மணம் பெறவே வருக.
-சுமஜ்லா.
ஒரிஜினல் பாட்டு இதோ.
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் - அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றால்
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக - எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக
மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக
வாழும் நாடும் வளரும் வீடும் மணம்பெறவே வருக
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
Tuesday, March 3, 2009
ஒளி மயமான எதிர்காலம் மெட்டு
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
உங்களின் மகள் விஷேசம் நல்ல படியாக முடிந்ததா?
உங்கள் மகளின் சீருக்கு என்ன பாட்டு எடுத்திங்க.. உங்களின் வாழ்த்து பாடல் எல்லாமே ரொம்ப அருமையாக இருக்கு
கல்யாணம், காது குத்து, நலங்கு சீர், போன்ற விசேஷங்களின் போது, சினிமா பாடல் மெட்டில் வாழ்த்துப் பாடல்கள் எழுதி, மியூசிக் உடன் அதைப் பதிவு செய்து, போட்டு விடுவது, எங்கள் ஊர் பழக்கம்.//
எந்த ஊர் சகோதரி நீங்க??? எங்க பகுதியில் இதுமாதிரி பழக்கம் இல்லை.
அப்புறம் பாட்டு நல்லா இருக்கு :)
ஆகா இப்படி ஒரு பழக்கமா.. நல்லாத்தான் இருக்கு.. :)
மெட்டு தப்பாமல் எழுதியிருக்கிறீர்கள்! பாராட்டுக்கள்!!
தஞ்சை மாவட்டத்தில் ’சோபனப் பாடல்கள்,’ என்ற பெயரில் இது போன்ற பிரபலமான திரைப்படப்பாடல்களின் மெட்டில் திருமணம் மற்றும் இன்ன பிற விழாக்களில் பாடுவதாக எனது நண்பர் திரு.சாபு தெரிவித்திருந்தார். அதை இப்போது தான் முதல் முறையாக வலைத்தளத்தில் பார்க்கிறேன். நானும் உங்களைப் போலத் தான் திரைப்படப்பாடல்களின் மெட்டுக்குப் பாடல்களை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஒரு வித்தியாசம்; நீங்கள் பிறரை வாழ்த்துகிறீர்கள்! நான் எனது கோபங்களை வெளிப்படுத்த இதை ஒரு சாதனமாகப் பயன்படுத்தி வருகிறேன். நேரம் கிடைத்தால் எனது வலைத்தளத்திற்கு வந்து பாருங்களேன்!
http://kinatruththavalai.blogspot.com
வேணு
எங்க ஊர், ஈரோடுங்க சார். வேணு சார், முத்துலட்சுமி-கயல்விழி, உங்க ப்ளாகை இன்று காலை தான் பார்த்தேன்; அருமை.
ஃபாயிஜா, என் மகள் சீருக்கு, பாட்டெழுதும் அளவுக்கு எனக்கு அவகாசம் இல்லை. எனினும், அவளுக்கு, ரோஜாப்பூ கலரில் சேலை வாங்கினோம். அதற்கு நான் விளையாட்டாக,
“ரோஜாப்பூ சேலையினை
ஒரு முல்லைப்பூ சூடியதே
சின்ன மைனாவும் அருகினிலே
இந்த அன்பு விழா நாளினிலே
எங்க நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே!”
என்று பாடினேன்.
மகளோடு சேர்த்து, மகனுக்கும், சுன்னத் சீர் செய்து அழகு பார்த்தோம்.
Post a Comment