Sunday, April 12, 2009

செல்லக்கிளிகளாம் பள்ளியிலே மெட்டு

என் பெற்றோரின் 25ம் ஆண்டு வெள்ளி விழாவுக்கு நான் எழுதியது.

வெள்ளிக்கிழமையாம் வெள்ளிவிழா
இல்லத்தில் பூத்ததாம் இன்ப விழா
நம் வாழ்த்தொலிகள் இங்கு ஓங்குதம்மா(2)

இறையின் வழியும் நபியின் மொழியும் கொண்டு வாழும் அப்பா அப்பா
மறையை ஓதி மனங்கள் கூடி ஒன்றி வாழும் அம்மா அம்மா
எங்கள் மனதில் பாசம் கொண்டு உம்மை வாழ்த்த அம்மா அம்மா
சுஹைனா, மஹபூப், சுரைஜு, லாப்பும் வாழ்த்திப் பாட வந்தோமம்மா (நம்)

தந்தை மனமும் தாயின் அன்பும் சேர்ந்து வாழ இல்வாழ்விலே
உங்கள் ஆசி வேண்டி நிற்கும் பிள்ளை மூவர் இந்நாளிலே
போவும் பொன்னும் பொருந்தி வாழ இறைவன் அருளைத் தந்தானம்மா
நூறு வயது இணைந்து வாழ நல்ல வாழ்த்து தந்தோமம்மா.(நம்)

சுமஜ்லா

ஒரிஜினல் பாட்டு

செல்ல கிளிகலாம் பள்ளியிலே
செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே
என் கண்மணிகள் ஏன் தூங்கவில்லை -
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை?

கன்றின் குரலும் கன்னி தமிழும் சொல்லும் வார்த்தை அம்மா அம்மா
கருணை தேடி அலையும் உலகில் உருகும் வார்த்தை அம்மா அம்மா
எந்த மனதில் பாசம் உண்டோ அந்த மனமே அம்மா அம்மா
இன்பக்கனவை அள்ளித் தரவே இறைவன் என்னைத் தந்தானம்மா...

என் கண்மணிகள் ஏன் தூங்கவில்லை -
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை?

நம்மை காக்கும் பிள்ளை ஒருவன் அவனும் தந்தை இல்லாதவன்
........................................
..................
.........
அடுத்த பாரா எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர் அனுப்பலாம்.

No comments:

Post a Comment