Wednesday, April 29, 2009

யார் சொல்வதோ பதில் யார் சொல்வதோ மெட்டு




ஒரிஜினல் பாட்டு இதோ:

பெண்:
யார் சொல்லுவதோ; யார் சொல்வதோ

ஆண்:
மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
அது மலரின் தோல்வியா
இல்லை காற்றின் வெற்றியா
அது மலரின் தோல்வியா
இல்லை காற்றின் வெற்றியா

பெண்:
கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்
சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்
அது கல்லின் தோல்வியா
இல்லை உளியின் வெற்றியா
அது கல்லின் தோல்வியா
இல்லை உளியின் வெற்றியா

ஆண்:
யார் சொல்லுவதோ; யார் சொல்வதோ
பதில் யார் சொல்லுவதோ; யார் சொல்வதோ

மேகம் என்பது அட மழை முடிச்சு
காற்று முட்டினால் அவிழ்ந்து கொள்ளும்

பெண்:
காதல் என்பது இரு மன முடிச்சு
கண்கள் முட்டினால அவிழ்ந்து கொள்ளும்

ஆண்:
மேகங்கள் முட்டிக் கொள்வதாலே சண்டை என்று பொருள் இல்லை

பெண்:
தேகங்கள் முட்டிக் கொள்வதாலே ஊடல் என்று பொருள் இல்லை

ஆண்:
இதழ்கள் பொய் சொல்லும்; இமைகள் மெய் சொல்லும்; தெரியாதா உண்மை தெரியாதா

பெண்:
காதல் விதை போல மெளனம் மண்மூலம் முளைக்காதா மண்ணை துலைக்காதா

ஆண் பெண்:
யார் சொல்லுவதோ; யார் சொல்வதோ
பதில் யார் சொல்லுவதோ; யார் சொல்வதோ

பெண்:
பனி குடங்கள் மெல்ல உடைந்துவிட்டால் உயிர் ஜெனிக்கும் உயிர் ஜெனிக்கும்

ஆண்:
மெளன குற்றங்கள் மெல்ல உடைந்துவிட்டால் காதல் பிறக்கும் காதல் பிறக்கும்

பெண்:
உள்ளத்தை மூடி மூடி தைத்தால் கலை இல்லை காதல் இல்லை

ஆண்:
உள்ளங்கை போலே உள்ளம் வைத்தால் பயம் இல்லை பாரம் இல்லை

பெண்:
நாணல் காணாமல் ஊடல் கொண்டாலும் நனைக்காத நதி நனைக்காதா
கவனம் நீரோடு கவிழ்ந்தேன் நின்றாலும் தெரிக்காதா கதிர் தெரிக்காதா

ஆண் பெண்:
யார் சொல்லுவதோ; யார் சொல்வதோ
பதில் யார் சொல்லுவதோ; யார் சொல்வதோ

ஆண்:
மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
அது மலரின் தோல்வியா
இல்லை காற்றின் வெற்றியா
அது மலரின் தோல்வியா
இல்லை காற்றின் வெற்றியா


பெண்:
கல்லுக்குள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்
சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்
அது கல்லின் தோல்வியா
இல்லை உளியின் வெற்றியா
அது கல்லின் தோல்வியா
இல்லை உளியின் வெற்றியா

ஆண் பெண்:
யார் சொல்லுவதோ; யார் சொல்வதோ
பதில் யார் சொல்லுவதோ; யார் சொல்வதோ

No comments:

Post a Comment