Saturday, July 4, 2009

அந்த அரபிக் கடலோரம் மெட்டு

என் அன்பு மகளின் முதல் பிறந்த நாளின் போது, நான் எழுதிய பாடல்.

எங்க லாஃபுக் கண்மணியும் இன்று பர்த்டே கொண்டாடும்
அன்புத் தென்றல் வாசம் மணக்கும் பூவின் செண்டாகும்

ஹேப்பி, ஹேப்பி, ஹேப்பி பர்த்டே டூ யூ

ஏ விண்ணின் தாரகையே, உன் ஒளியைக் கண்டோமே
தேன் பூக்கள் மழையாய்ப் பொழியப் பொழிய பாசம் கொண்டோமே
ஹேப்பி, ஹேப்பி, ஹேப்பி பர்த்டே டூ யூ
ஹே.... ஹேப்பி, ஹேப்பி, ஹேப்பி பர்த்டே டூ யூ

வசந்தம் வாழ்வில் வந்து வழியில் வீசியது ஆஹா என்ன அழகோ?
பிஞ்சுக் கைவிரல்கள் நெஞ்சைத் தீண்டியது ஆஹா என்ன எழிலோ?
நெஞ்சம் மகிழ்ந்து விட கன்னம் குழிந்து விட முத்தம் நூறு விதமோ?
வசந்தம் வாழ்வில் வந்து உன்னைச் சேர்ந்து விடும், கண்ணே அன்பு பதமோ?
ஹேப்பி, ஹேப்பி, ஹேப்பி பர்த்டே டூ யூ
(எங்க லாஃபுக் கண்மணியும்)

லாஃபுக் கண்மணியை அள்ளி அணைத்த பின்னும் ஆசை மீதமிருக்கு!
தென்றல் தழுவி வர சுற்றம் சூழ்ந்து வர, எழிலும் அதிகமிருக்கு!
அழகுத் தோரணங்கள் ஆடி அசைவதிலே பாசம் சேர்ந்து இருக்கு!
பந்தம் பாசங்களும் உன்னைச் சேர்ந்து விட கண்ணே அன்பு இருக்கு!
ஹேப்பி, ஹேப்பி, ஹேப்பி பர்த்டே டூ யூ
(எங்க லாஃபுக் கண்மணியும்)

-சுமஜ்லா

ஒரிஜினல் பாட்டு இதோ:


அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே
அந்தக் கன்னித் தென்றல் ஆடைகளாக்கக் கண்கள் கண்டேனே

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

ஏ பள்ளித்தாமரையே உன் பாதம் கண்டேனே
உன் பட்டுத் தாவணி சரியச் சரிய மீதம் கண்டேனே

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா
ஏ ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

சேலை ஓரம் வந்து ஆளை மோதியது ஆஹா என்ன சுகமோ
பிஞ்சுப் பொன்விரல்கள் நெஞ்சைத் தீண்டியது ஆஹா என்ன இதமோ
சித்தம் கிளுகிளுக்க ரத்தம் துடிதுடிக்க முத்தம் நூறு விதமோ
அச்சம் நாணம் அட ஆளைக் கலைந்தவுடன் ஐயோ தெய்வப் பதமோ

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

(அந்த அரபிக்கடலோரம்)

சொல்லிக்கொடுத்தபின்னும் அள்ளிக்கொடுத்தபின்னும் முத்தம் மீதமிருக்கு
தீபம் மறைந்தபின்னும் பூமி இருண்டபின்னும் கண்ணில் வெளிச்சமிருக்கு
வானம் பொழிந்தபின்னும் பூமி நனைந்தபின்னும் சாரல் சரசமிருக்கு
காமம் கலைந்தபின்னும் கண்கள் கடந்தபின்னும் காதல் மலர்ந்துகிடக்கு

ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா

(அந்த அரபிக்கடலோரம்)

2 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துக்கள் கவிஞரே

சூப்பர் ரொம்ப சூப்பர்

SUMAZLA/சுமஜ்லா said...

தேடி வந்து வாழ்த்து தந்தமைக்கு நன்றி ஸ்டார்ஜன்.

Post a Comment