Friday, March 13, 2009

நீயில்லை என்றால் பாட்டு மெட்டு

என் மகளுக்கு எழுதிய நலங்கு பாடல்.

லாஃபிரா கண்ணின் வாழ்க்கையிலின்று வாழ்த்துக்களே
உன் விழியசைவில் ஊரெல்லாம் எழுந்து வந்ததிங்கே
உங்காலம் எப்போதும், இவ்வாழ்த்து நின்றாடும்
இவ்வாழ்த்துப் போல் என்றும் தேன் வார்த்தை இங்கேது.........
ஓ......
கண்ணே கண்ணே பூ வாசமிங்கு
உனை சேரும் கண்ணே புன்னகையுமின்று...

லாஃபிரா கண்ணின் வாழ்க்கையிலின்று வாழ்த்துக்களே
உன் விழியசைவில் ஊரெல்லாம் எழுந்து வந்ததிங்கே

புது ஜேன்வரியில் பதினாளதனில் ஒளிவீசும் மாலைப் பொழுது
பூ வாசத்திலாடும் நேசமுண்டாகும் பாடும் தாயின் மனது...
உன் பார்வை தேன் சிந்தும், சிந்தும்..
உனை கொஞ்சும் நல்ல பந்தம் பந்தம்...
கனிவாழ்த்து அதை முந்தும் முந்தும்...
மலர்தூவும் நம்ம சொந்தம் சொந்தம்...

மலர் மாலை கொண்டாடு
அடி கண்ணே நீ இன்று..
புது வாழ்வை கொண்டாடு..

லாஃபிரா கண்ணின் வாழ்க்கையிலின்று வாழ்த்துக்களே
உன் விழியசைவில் ஊரெல்லாம் எழுந்து வந்ததிங்கே
உங்காலம் எப்போதும், இவ்வாழ்த்து நின்றாடும்
இவ்வாழ்த்துப் போல் என்றும் தேன் வார்த்தை இங்கேது.........
ஓ......

நான் நாள் முழுதும் உனை வாழ்த்துவதை என் கண்கள் கொண்டு ரசித்தேன்
என் லாஃபிராமா கிளி உன்னழகை நான் நெஞ்சம் மகிழ படித்தேன்...
உனைப் போலே ஒரு மாணிக்கத்தை
கண்ணில் யாரும் இங்கு பார்த்ததில்லை...
உனைப் பார்த்தால் மலர் வாசம் வீசும்
மயில் போல உந்தன் நேசம் பேசும்...

இந்த பாடல் எல்லாமே
நல்ல முத்தாரம் போலே
உனை சுற்றும் செந்தேனே...

லாஃபிரா கண்ணின் வாழ்க்கையிலின்று வாழ்த்துக்களே
உன் விழியசைவில் ஊரெல்லாம் எழுந்து வந்ததிங்கே
உங்காலம் எப்போதும், இவ்வாழ்த்து நின்றாடும்
இவ்வாழ்த்துப் போல் என்றும் தேன் வார்த்தை இங்கேது.........
ஓ......

ஒரிஜினல் பாட்டு இதோ

நீயில்லை என்றால் வாழ்க்கையில் இல்லை வானவில்லே
உன்முகம் பார்த்து சூரியன் சிரித்து எழுந்ததிங்கே...
.............
..............
என் மௌனம் அதை சொல்லும் சொல்லும்
உன் உள்ளம் அதை மெல்லும் மெல்லும்..
நடு ஜாமம் அது செல்லும் செல்லும்
மலர்பாதம் நமை கொல்லும் கொல்லும்..

இனி ஆவல் கொள்ளாது
அடி அம்மாடி என்று
அது தாவல் கொள்ளாது..

நீயில்லை என்றால் வாழ்க்கையில் இல்லை வானவில்லே
உன்முகம் பார்த்து சூரியன் சிரித்து எழுந்ததிங்கே...

நான் ஊர்மயங்கும் பல ஓவியத்தை
என் கைகள் கொண்டு வரைந்தேன்...
என் காதலனே உன் சித்திரத்தை
என் கண்கள் கொண்டு வரைந்தேன்...

உனைப் போலே ஒரு ஓவியத்தை
ஒன்று கூட இங்கு வரைந்ததில்லை
உனைப் பார்த்தால் மூச்சு முட்டும்
மழைபோல உடல் வேர்த்துக் கொட்டும்

இந்த காதல் வந்தாலே
அந்த அரிச்சந்திரன் கூட
பல பொய்கள் சொல்வானே...

(சில வரிகள் மறந்துவிட்டேன்... தெரிந்தவர்கள் எனக்கு அனுப்பலாம்...)

No comments:

Post a Comment