Sunday, March 15, 2009

வசீகரா பாடல் மெட்டு

என்லாஃபிரா கண்நெஞ்சினிக்க - மென்
புன்னகையை பூக்களாய் தூவும்.
தலைமகள் நன்நலங்கினிலே - பொன்
மின்னலொளி பாதையில் சேரும்.

தேன் வாழ்த்துக்களும் பாட்டுக்களும் இந்நலங்கால் தானே!
வாழ்ந்திடுவாய் மகிழ்ந்திடுவாய் நல்மனதால் தானே தான்!

பொறுமையின் சுடரொளி கலைமானே
கலர்பூக்களோடு கிரீடம், உன் பாதைக்கு புதுப் பூக்கள்
இருவிழி மின்ன அன்பில் என்னை வெல்வாய்
அதை உணர்ந்த பின்பு கண்ணே
மனம் நிறைந்தே தான் வழிந்தோடும்.

கண்ணோடு கதை பேசி கனி வார்த்தை சொல்ல வர வேண்டும்.
கண்மணியின் விளையாட்டில் கதையாவும் சொல்லி தர வேண்டும்.

என்லாஃபிரா கண்நெஞ்சினிக்க - மென்
புன்னகையை பூக்களாய் தூவும்.
தலைமகள் நன்நலங்கினிலே - பொன்
மின்னலொளி பாதையில் சேரும்.

தேன் வாழ்த்துக்களும் பாட்டுக்களும் இந்நலங்கால் தானே!
வாழ்ந்திடுவாய் மகிழ்ந்திடுவாய் நல்மனதால் தானே தான்!

முழுநிலா உதித்ததும் உனைப் பார்த்து
உன்மேனி ஒளியால் வெட்க நீ ஜொலிப்பாயே அது புதுமை!
இறைவனின் மறையருள் மணம்வீச
இந்நாளிலே கண்ணே நீ மகிழ்வாயே அது இனிமை!

மானே உன் மனம் போல நல்லெண்ணம் யாவும் நிறைவேறும்
மாதவத்தால் நீயுதித்தாய் நிறைவான நலங்கு அரங்கேறும்.

என்லாஃபிரா கண்நெஞ்சினிக்க - மென்
புன்னகையை பூக்களாய் தூவும்.
தலைமகள் நன்நலங்கினிலே - பொன்
மின்னலொளி பாதையில் சேரும்.

தேன் வாழ்த்துக்களும் பாட்டுக்களும் இந்நலங்கால் தானே!
வாழ்ந்திடுவாய் மகிழ்ந்திடுவாய் நல்மனதால் தானே தான்!


ஒரிஜினல் பாட்டு இதோ:

வசீகரா என் நெஞ்சினிக்க - உன்
பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே!
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே!

அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சினேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும்

எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்

வசீகரா என் நெஞ்சினிக்க - உன்
பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே!
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே!

தினம் நீ குளித்ததும் எனைத் தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீர் என்று
பின்னாலிருந்து எனை நீ அணைப்பாயே அது கவிதை

யாரேனும் மணி கேட்டால் அதைச் சொல்லக் கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே

வசீகரா என் நெஞ்சினிக்க - உன்
பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே!
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே!

5 comments:

Anonymous said...

உங்கள் கவிதை மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் கற்பனை வளம் கண்டு வியப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.

அன்புடன்
பிருந்தா

Anonymous said...

ஹாய் பிருந்தா,
இன்னும் நிறைய இது போல பாடல்கள் இருக்கு. இதெல்லாம் மற்றவர்கள் படிக்க வேண்டும் என்பதை விட பலப்பல டைரிகளில் இருப்பது எல்லாம் தொலைந்து போகாமல் ஒரே கலெக்‌ஷனாக இருக்க வேண்டும் என்று தான் பதிய ஆசைப்படுகிறேன்.
-சுஹைனா

குப்பன்.யாஹூ said...

உங்களின் எண்ணத்தை நான் வணங்குகிறேன்.

ஆனால் சில வார்த்தைகளுக்கு எனக்கு அர்த்தம் தெரிய வில்லை, விளக்கவும்.

என்லாபிரா
நன்நலங்கினிலே (பிராமண சமூகத்தில் திருமண நாள் அன்று மாலை நடை பெரும் நலுங்கு நிகழ்வைத்தான் நலன்கள் என்று சொல்கிறீர்களா ).



ஆனால் கவிதாயினி தாமரைஅயிந் அற்புதமான வரிகளை, தமிழை என்னால மறக்க முடியாது.

குப்பன்_யாஹூ

Anonymous said...

இந்த நலங்கு நிகழ்ச்சி, என் மகள் லாஃபிரா வுக்கு அவளுடைய ஆறு வயதில் அவளுக்கு காது குத்தியதற்கு நடத்தப்பட்டது. அப்போ எங்கள் சிறு குழந்தையை வாழ்த்தி நான் எழுதிய பாடல்.

சரி, அது என்னங்க தாமரைஅயிந்?

-சுஹைனா

Unknown said...

இன்னும் கூட கொஞ்சம் புரியும் படியாய் எளிமையாய் அமைத்திருக்கலாம். சுமார்.

Post a Comment